சிறுகதைகள் கட்டுக்கோப்போடு இருக்க வேண்டும் என்பார் ரா.கி.ர. இந்தத் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகள் கட்டுடைத்த சிறுகதைகள். ஆனாலும்கூட படிப்பதற்கான சுவாரசியத்துடன் ஒரு ஒழுங்குடன் அமையப் பெற்றிருக்கின்றன. அதுதான் ஆசிரியர் ரா.கி.ர.வின் சிறப்பு. மாற்றுக் குறையாத விறுவிறுப்புடன் அமைந்துள்ள ஒரு சிறுகதைத் தொகுதியை இப்போது படித்து ரசிக்கப் போகிறீர்கள்.