1880-2015 க்கு இடைப்பட்ட நீண்ட காலப் பரப்பில் தன் கதையை விரித்துச் செல்கிறது ‘கந்தில்பாவை’. மனநிலை பாதிப்பு எனும் நோய் பரம்பரை பரம்பரையாகத் தொடரும் நுட்பத்தையும் யுத்தம் அந்த வடுக்களை ரணமாக்கி அவர்களைச் மனச்சிதைவு நிலைக்குத் தள்ளும் அவலத்தையும் நான்கு தலைமுறைகளின் அனுபவங்களினூடாக நாவல் வெளிப்படுத்துகிறது. நான்கு கட்டங்களாய் நிகழும் தலைமுறைகளின் தனித் தனிக் கதைகளும் நாவலென்ற ஒற்றைச் சரட்டில் இணையும்படியாக இதன் புனைவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பின்னோட்ட விசையில் தன் கதையை விரித்துச் செல்லும் நாவல் அதையே தன் வடிவ உத்தியாகவும் சமைத்துக்கொள்கிறது. யாழ்ப்பாணத்தின் புராதன தலைநகராகக் கருதப்பெறும் கந்தரோடையையும் அதைச் சூழ்ந்த பிரதேசத்தையும் கதைக் களமாய்க்கொண்டு வரலாறு - ஐதீகம் ஆகிய இரட்டைத் தடங்களில் தன் புனைவுப் பயணத்தைச் செய்திருக்கிறது நாவல். நூலிலிருந்து
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.