குருகுலக் கல்வியை அவிநயனார் மற்றும் சிகண்டியார் என்ற அகத்தியரின் சீடர்களிடம் கற்று முடித்த சாரகுணன் கபாடபுரத்தைக் காண நீண்ட நாள் கழித்து ஒரு திருவிழா நாளில் வருகிறான். வரும் வழியில் கண்ணுக்கினியாள் என்ற பாணர் குலப் பெண்ணின் மீது காதல் கொள்கிறான். இக்காதலை அறிந்து கொள்ளும் வெண்டேர்ச் செழியன் மன்னர்களுக்கு கலைகளின் மீதும் பெண்களின் மீதும் அதிக நாட்டம் இருக்கக்கூடாதென்று கூறி சில அரச வேலைகளைக் கொடுத்து அவனின் நோக்கத்தை அரசத்தந்திரங்களில் திருப்ப முயல்கிறார். இசை மீதும் கண்ணுக்கினியாள் மீதும் தீராத காதல் கொண்ட சாரகுணனின் போக்கு அரச தந்திரங்களில் அவ்வளவாக திரும்பாமல் இருக்கிறது. கடம்பர் அவுனர் போன்ற திருடரினத்தைச் சேர்ந்தவர்கள் கபாடபுர முத்து மற்றும் ரத்தினங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளைத் சாரகுணனும் தேர்ப்பாகன் மற்றும் வீரனான முடிநாகனும் சேர்ந்து முறியடித்தும் அதில் திருப்தி கொள்ளாத முதிய பாண்டியர் அவர்களிருவரையும் தென்பழந்தீவுகள் என்னும் பயங்கர நாகரிகத்தைக் கொண்ட மக்களினங்கள் வாழும் தீவுகளின் தொகுதிக்கு அரசத்தந்திரங்களை அனுபவம் மூலம் கற்பதற்கு அனுப்பி வைக்கிறார்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.