*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹370
₹390
5% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
சீனப் போர் மூண்டபோது பொறியில் பட்டப் படிப்பு படித்துகொண்டிருந்த எஸ்.பி.குட்டி. சீனாவின் அடாவடியால் கோபமுற்று படிப்பு முடிந்ததும் ராணுவத்தில் சேர்ந்தார். கமிஷண்ட் அதிகாரியாக காஷ்மீரில் நியமிக்கப்பட்டார். 1985 இந்தோ பாக் போரின் கடைசிக் கட்டத்தில் பங்கெடுத்தார்.முதல் காஷ்மீர் போரில் இந்திய ராணுவத்தின் ஆரம்பகட்டச் செயல்பாடுகள் போரின் ஈடுபட்ட தளபதிகள் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வாகனங்கள் போர் வியூகங்கள் என அனைத்தையும் துல்லியமாக உள்ளடக்கிய போர் ஆவணம் இது. 1947 காஷ்மீர் யுத்தத்தில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள் பலரையும் சந்தித்துப் பேசி இந்நூலை எழுதியிருக்கிறார்.‘காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் வெளியேறவேண்டும் அதன் பிறகே இந்திய ராணுவம் விலக்கிகொள்ளப்பட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.’ ஜநாவின் இந்த நிபந்தனையின் பேரிலேயே வாக்கெடுப்பு நடத்த இந்தியா சம்மதித்திருக்கிறது என்பதை ஜநா தீர்மானங்களை மேற்கோள் காட்டி விளக்குகிறார்.அம்பேத்கர் சர்தார் படேல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரஜா பரிஷத் (காஷ்மீர் மக்களின் கட்சி) என அனைத்துத் தரப்பின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஆர்ட்டிகின் 370 உருவான விதம் நூலில் வேதனையுடன் விவரிக்கப்படுகிறது.காஷ்மீர் தொடர்பான இந்தியத் தரப்பு நியாயங்களையும் பாகிஸ்தானின் அத்துமீறல்களையும் இந்திய அரசியல்வாதிகளின் பிழைகளையும் பிரிட்டிஷாரின் தந்திரங்களையும் முழுமையாக விவரிக்கும் தமிழ் நூல் இது.