*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹425
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
அதே மாயம். அதே வசீகரம். அதே மின்னல் வேக நடை. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து சுமார் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் புத்துயிர்ப்பு பெற்று பாயத் தொடங்கி இருக்கிறது.\n\nபல லட்சம் இதயங்களில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரும் படைப்பை எடுத்துக்கொண்டு அதே உன்னத மொழியில் அதே உயிர்ப்போடு அதே சுவையோடு தொடர்வதென்பது காரிருளில் கத்தி மேல் நடப்பதற்குச் சமமான ஒரு பணி. அனுஷா வெங்கடேஷ் அப்பணியை வியக்க வைக்கும் அளவுக்குக் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார். பொன்னியின் \nசெல்வனின் பெருமிதத்துக்குரிய நீட்சியாக காவிரி மைந்தன் இதோ உங்கள் கரங்களில் தவழ்கிறான்.\n\nவாசிக்க வாசிக்க பரவசம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. வந்தியத்தேவனுடன் படகில் செல்கிறோம்.பொன்னியின் செல்வருடன் கொள்ளையர் தீவில் சிக்கிக்கொள்கிறோம். கந்தவேள் மாறனின் காதலில் திளைக்கிறோம். ரவிதாசனின் சதியை ஆழ்வார்க்கடியானுடன் இணைந்து ஒற்றுக் கேட்கிறோம். அச்சமும் காதலும் மர்மமும் வீரமும் சாகசமும் மாறி மாறி நம்மை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. சோழர்களின் அற்புத உலகம் அத்தனை வண்ணங்களோடும் நமக்காக மீண்டுமொருமுறை திறக்கிறது.\n