இப்புத்தகம் பாவையின் இரணத்தையும் பதுக்கிய ஆசைகளையும் பேசும். இக்கவிதைகளைப்படித்த பின்பு ஏதாவது ஒரு கவிதை உங்கள் உணர்வுகளோடு ஒன்றிப்போய் உங்கள்உதட்டோரம் சிறு புன்னகைப் பிறந்தாலும் அவை என் புத்தகக்கோட்டையின் கட்டுமானத்தில்அடிக்கற்களாய் வந்து சேரும். எனக்கு பெரிதாய் ஆசை ஒன்றும் இல்லை கனவுகள் நிறைந்தஉங்கள் கண்கள் கண்சிமிட்டாமல் இப்புத்தகத்தைப் படித்தாலே போதும்.