குடும்ப அமைப்பு என்கிற ஒன்று வலுவாக வேரூன்றியிருப்பது தமிழ்நாட்டைப் போல் எங்கும் இல்லை. நம் குடும்பங்களில் இருக்கும் பாசப் பிணைப்புகளைப் பற்றிப் பல்லாயிரம் கதைகள் எழுதலாம். அப்படியான குடும்பச் சிக்கல்கள் உறவின் தடுமாற்றங்கள் போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களை இந்தச் சிறுகதைகள் தொட்டிருக்கின்றன. பல்லாயிரத்தில் சில துளிகள் இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் என்றாலும் அத்தனையும் அமுதத் துளிகள்.