*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹190
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
பளிச்சென்று ஃபவுண்டன் போல் இருபத்து நான்கு மணி நேரமும் இருக்க முடியுமா? முடியும். உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் நூறு டிப்ஸ்கள் அடங்கிய பூங்கொத்து இதோ! கைநிறையப் பணம். கடற்கரையோரம் ஒரு பங்களா. கணிசமான பேங்க் பாலன்ஸ். நினைத்த மாத்திரத்தில் எதை வேண்டுமானாலும் நடத்திக்காட்டும் திறன். போதுமா? சந்தோஷமான வாழ்க்கைக்கு இவை போதுமா? இதெல்லாம் இருந்தால் இதையெல்லாம் செய்தால் இப்படியெல்லாம் வாழ்ந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நமக்கு நாமே ஒரு நீண்ட பட்டியலை தயார் செய்து வைத்திருக்கிறோம். அவற்றை எதிர்பார்த்து ஏக்கத்துடன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறோம். ஒரு கணம் கூட ஓய்வில்லை. ஓட்டம். அலைச்சல். போட்டி. விளைவு? ஏமாற்றங்கள் பிரச்னைகள் தோல்விகள். மகிழ்ச்சி என்பது மணிபர்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அது ஒரு மனநிலை. உங்களுக்குத் தேவை ஒரு புதிய பட்டியல். உற்சாகமூட்டும் ஒரு புதிய அனுபவத்துக்கு உடனடியாக உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இனி நீங்கள் ரசிக்கப் போகிறீர்கள்; அனுபவிக்கப் போகிறீர்கள். குட்டிக் கதைகள் சுவையான சம்பவங்கள் ஆழமான அலசல்கள் என்று உங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றியமைக்கப்போகும் மந்திர நூல் இது.