*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹128
₹150
14% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி நம் தமிழ்மொழி. அதை போற்றிக் காக்கும் கடமை நம்முடையது. உலகெங்கும் பரவிக்கிடக்கும் நம் மழலைச் செல்வங்கள் நம் மொழியினை எளிதில் கற்கவும் எழுதவும் ஒரு ஆசிரியராகவும் கவிஞராகவும் என் சிறு முயற்சியாக படைக்கப்பட்டதே இந்தக் குழலினிது யாழினிது.தமிழை கற்போம் கற்பிப்போம் ‘குழலினிது… யாழினிது…’ நூலின் ஆசிரியர் கவிதாயினி. அமுதா பொற்கொடி. இவர் 1991ஆம் ஆண்டு வடசென்னை கிழக்குக் கல்லறைச்சாலை குடிசைமாற்று வாரியப் பகுதியில். இவரின் தந்தை வை. வைகுண்டம் நடத்தி வந்த ‘திரி ஜெகன் மோகன் நடுநிலைப்பள்ளி’யில் தாளாளராக உள்ளார். அன்று முதல் இன்றுவரை பல போராட்டங்களுக்கிடையே இங்குள்ள குடிசைவாழ் மக்களுக்கு இலவச தமிழ்வழிக் கல்வி வழங்கி வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக பள்ளி நேரம்போக ஓய்வு நேரங்களில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றை வானதி பதிப்பகம் ஒன்பது கவிதைத் தொகுப்புகளாகவும் ஒரு கட்டுரைத் தொகுப்பாகவும் வெளியிட்டுள்ளது. இவரது அடுத்தப் படைப்புகளான ‘வேர்களை வருடும் விழுது’ ‘ஆசிரியர் குறிப்பேடு’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் ஒரு கவிதைத் தொகுப்பும் விரைவில் வெளிவர உள்ளது.