*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹247
₹350
29% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும் ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும் இதற்கு முன்பே ஹாம்லெட் லியர் அரசன் என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும் தமிழை இயல்பாக லாவகமாக உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள். இவற்றை ஆட்சியோடு கையாளுவதால் மாக்பெத் என்ற இந்த நாடக மொழிபெயர்ப்பின் மூலமாக ஷேக்ஸ்பியரின் இதயத்தை அவரால் தொட முடிகிறது. ஷேக்ஸ்பியரை நேரிற்பயிலும் போது ஏற்படும் ஐயங்கள் இடர்பாடுகள் இவை ஏதுமின்றி தெளிந்த இன்றைய தமிழில் மகராஜன் தருகிறார். அவருடைய உதவியால் பழங்காலத்து ஸ்காட்லாண்டுக்குப் போகிறோம்; அங்கே உயிர்பெற்றுக் கண்முன்னே உலாவும் பாத்திரங்களோடு ஒட்டுகிறோம்; மனித உள்ளத்தின் விதவிதமான கதிகளை நாமே பயில்கிறோம்; அதன் பெருமையை அதன் சிறுமையைக் காண்கிறோம். பிறகு பக்குவம் பெற்ற மனதோடு தினசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறோம். இத்தனைக்கும் துணை செய்யும் உலக மகாகவி ஒருவனோடு கரவின்றி உறவாடும் கவிதைப் பயனைப் பெறுகிறோம். இதைச் சாத்தியமாக்கிய அறிஞர் மகராஜன் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர். -பேராசிரியர் அ. சீநிவாசராகவன்