நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு என்று நன்கு தெரிந்திருந்தும் மதுஅருந்தும் வழக்கத்தை விடமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது தமிழகம்நிலைமையை மேலும் மோசமாக்கும்படி அரசே மது விற்பனையைத்தலைமையேற்றி நடத்தி வருதோடு அதைப் பெரிதும் ஊக்குவித்தும் வருகிறது.இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் காலம் காலமாகத் தமிழர்கள் மதுவைச்சுவைத்துக்கொண்டுதானே இருந்திருக்கிறார்கள் என்னொரு வாதமும்முன்வைக்கப்படுகிறது. இது உண்மையா? வேத காலம்முதலே மது அருந்தும்வழக்கம் இருந்திருக்கிறதா? சங்க இலக்கியங்கள் மதுவைக்கொண்டாடியிருக்கின்றனவா? எனில் தமிழர்களின் பண்பாட்டோடும் கலாசாரத்தோடும்மது பின்னிப் பிணைந்திருக்கிறதா? அதனால்தான் மதுவை இன்றுவரை நம்மால்ஒழிக்கமுடியவில்லையா?கோ. செங்குட்டுவனின் இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகள்அனைத்துக்கும் விடையளிப்பதோடு ஒரு முக்கியமான உண்மையையும் அழுத்தமாகச்சுட்டிக்காட்டுகிறது. மதுவை ஆதரிக்கும் குரல்களுக்குச் சற்றும் குறை வில்லாதவைமதுவுக்கு எதிரான குரல்கள். சங்க இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள் தொடங்கிசமகால பத்திரிகை மேடை நாடகம் திரைப்படம் நாவல் அரசியல் மேடை என்றுஎல்லாவிதமான ஊடகங்களையும் பயன்படுத்தி மதுவிலக்கு பிரசாரம்மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ராஜாஜி பெரியார் மபொசி அண்ணா என்று மாபெரும்ஆளுமைகள் மதுவிலக்குக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்கிறார்கள் அதே சமயம்மதுவிலக்கை முன்வைத்து அரசியல் களம் அன்று தொடங்கி இன்றுவரை கடும்தள்ளாட்டத்தில் இருந்துவருவதையும் அதற்கான பின்னணி காரணங்களையும்இந்நூல் காட்சிப்படுத்துகிறது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.