தமிழ் என்று சொல்லும் முன்னே வீரத்து நெஞ்சம் அது நிமிர்கிறதுதமிழ் என்று சொல்லும் முன்னே மென் குரலது இடியொலி ஏற்கிறதுதமிழ் என்று சொல்லும் முன்னே தோள் இரண்டும் திமில் எழுகிறதுதமிழ் என்று சொல்லும் முன்னே உதிரமது மேல் கீழாய் முறுக்குகிறதுதமிழ் என்று சொல்லும் முன்னே விழி இரண்டும் செம்மின்னல் பாய்கிறதுதமிழ் என்று சொல்லும் முன்னே பகையறக்க விற் புருவம் எய்கிறது