*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹183
₹250
26% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
2014 ஆம் ஆண்டு மே 17 அன்று, அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர்கள் முன் ஓர் உரை நிகழ்த்தினார். “இங்குத் தொடங்குவது உலகையே மாற்றும்” என்ற அப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் வாசகத்தை அடித்தளமாக வைத்து அவர் ஆற்றிய உரையில், தான் நேவி சீல் பயிற்சியின்போது கற்றுக் கொண்ட பத்துப் பாடங்களை மாணவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அப்பாடங்கள் தன்னுடைய பயிற்சியின்போதும், தன்னுடைய நீண்ட, சாகசமிக்கக் கடற்படைப் பணியின்போதும் தனக்கு உதவியதுபோல வாழ்க்கை முழுவதும் தனக்கு எப்படி உதவின என்பதையும் அவர் எடுத்துரைத்தார். தங்களை மாற்றிக் கொள்ளவும், அதன் மூலம் இந்த உலகை மாற்றவும் அப்பாடங்களை எவரொருவராலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறி அவர் அம்மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். காலம் கடந்து நிற்கின்ற ஆற்றல் கொண்ட இந்நூல், நடைமுறைக்கு ஏற்றப் பல அறிவுரைகளையும் ஊக்குவிப்பையும் கொண்டுள்ளது. வாழ்க்கையின் இருண்ட கணங்களில்கூட அதிக அளவில் சாதிப்பதற்கு இந்நூல் உங்களுக்கு உத்வேகமூட்டும் என்பது உறுதி.