பாண்டிவள நாட்டிலுள்ள திருவாதவூரிலே ஆதி சைவமரபிற் றோன்றியவரும் திருப்பெருந்துறையில் சிவபெருமான் மக்களுருவில் வந்து ஆட்கொண்டருளப் பெற்றவரும் சைவசமயாசாரியர்களுள் காலத்தால் முற் பட்டு விளங்கியவரும் தமிழ் நாட்டின்கண் உரமுற்றுச் சைவவான்பயிர்க்குக் கேடு விளைத்த புத்த மதத்தைக் களைந்தவரும் ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெருமை பெற்றவரும் இறைவனே தம் பொருட்டு நரியைப் பரியாக்கியும் பரியை நரியாக்கியும் வைகையைப் பெருக் கெடுக்கச் செய்தும் பிட்டு வாணிச்சிக்குக் கூலியாளாக வந்து மண் சுமந்தும் அவ்வாற்றால் அரிமர்த்தன பாண் டியனுக்குத் தம் பெருமையை நன்கு அறிவுறுத்திய பேறுபெற்றவரும் உருகா உளத்தையும் உருக்கவல்ல தாய் அன்புச் சுவை ததும்பும் திருவாசகத்தையும் அகப் பொருட் சுவை நிரம்பித் துளும்பிக் கோவைகட்கெல் லாம் முற்பட்டதாய் விளங்குந் திருச்சிற்றம்பலக் கோவை யாரையும் அருளிச்செய்தவரும் தில்லைத் திருவருளில் இரண்டறக் கலந்தவருமாகிய மணிவாசகப் பெருமான் மாண்புமிக்க வரலாற்றனை மாந்துவது மக்கள் கடனே.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.