இந்தப்புத்கத்தில் கற்பனைக்கதைகளுடன் நான் பார்த்து வியந்த நல்ல மனிதர்களும் வளைய வருவார்கள்.அவர்களைப்பார்த்து நான் வியந்த வியப்பை உங்களுக்கும் சரியாக கடத்தி விடுவேன் என்று நம்புகிறேன்.மிகச்சாதாரண மனிதர்கள் ஆனால் நல்லவர்கள் அவர்களைப்பற்றிய என் விவரிப்பு உங்கள் மனதின் ஏதாவது ஓர் இடத்தைத் தொட்டுவிடும் என்பது உறுதி. அதன் கூடவே என்னை என் ஆழ்மனதை பாதித்த விஷயங்கள் அடங்கிய சில சிறுகதைகளையும் கலந்து இந்த தொகுதியைத்தொகுத்துள்ளேன். மேரி என்ற மாரி என்ற இந்தக் கதைத் தொகுப்பின் ஆசிரியர் லலிதா சங்கர். இது பேச்சிடெர்ம் டேல்ஸ் வெளியிடும் இவரின் இரண்டாவது கதைத் தொகுப்பு. அம்புட்டு ஆசை இவரின் முதல் தொகுப்பு கதைகள் அனைத்தும் பொதுவாக எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும். அவர்களின் உணர்வுகளை அலசும். நுண்ணிய உணர்வுகளை அழகாக எடுத்துச்சொல்லுவது இவரது சிறப்புத்தன்மை இவர் அடிப்படையில்மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்க்ஷன் வேலை செய்கிறார்.