*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹420
₹599
29% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
இஸ்ரேலின் இரகசியப் பாதுகாப்பு அமைப்பான ‘மொசாட்’தான் உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்பு என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஓர் உண்மையாகும். அந்த அமைப்பின் அறுபதாண்டுகால வரலாற்றில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து மேற்கொண்ட மிகவும் ஆபத்தான நம்புதற்கரிய மயிர்க்கூச்செறிய வைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகளை அப்படியே தத்ரூபமாக விவரிக்கின்ற இந்நூல் அவை தொடர்பாகத் திரைக்குப் பின்னால் நிகழ்ந்த சம்பவங்களையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கொடூரமான நாஜி கொலைகாரன் அடால்ஃப் ஐக்மேனின் கடத்தலில் தொடங்கி சமீபத்தில் நிகழ்ந்த முக்கிய ஈரானிய அணுசக்தி அறிவியலறிஞர்களின் களையெடுப்புவரை இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள அசாத்தியமான உண்மைக் கதைகள் ஹாலிவுட் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்ற அதிரடி சாகசக் கதைகளை விஞ்சி நிற்கின்றன. சர்வதேச உளவு இரகசியப் புலனாய்வு திரைமறைவுப் போர்கள் போன்றவை உங்களுக்குக் குதூகலமும் பிரமிப்பும் ஊட்டும் என்றால் இப்புத்தகம் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் என்பது உறுதி.