“மும்தாஜின் நிழல்” என்ற இக்கவிதை நூலில் ஒரு காதலி தன் காதலனின் அன்பையும் ஏக்கங்களையும் புரிந்துணராமையால் அக்காதலனின் மனதில் ஏற்பட்ட அளவுகடந்த வருத்தத்தையும் அவள் மேல் கொண்ட அன்பினால் அக்காதலன் அக்காதலின் அழகை வர்ணிக்கும் விதத்தையும் இதனுள் காணலாம்.இந்நூலில் 70 கவிதைகள் இடம்பெற்றுள்ளது .இதில் பல கவிதைகள் என் வாழ்வில் உண்மையில் நடந்த நிகழ்வுகளை கருவாக கொண்டது ஆகும். தனிமையில் தவிக்கும் காதலனின் புலம்பல்களும் புன்னகையில் பூரிக்கும் காதலியின் அழகும் இந்நூலின் உயிராகும்.