பழையன கழிதல் அனந்தாயி ஆகிய நாவலை எழுதிய ப. சிவகாமி வரலாற்றில் B.A மற்றும் M.A பட்டம் பெற்றவர். IAS தேர்வில் வெற்றி பெற்ற இவர் சுமார் 22 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணியில் இருந்திருக்கிறார். தற்போது அரசியல் இவரது களமாக இருக்கிறது. 1995 முதல் தமிழ் இலக்கிய இதழான புதிய கோடாங்கியில் தலையங்கமும் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலும் எழுதி வருகிறார். “குறுக்குவெட்டு இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள நாளும் தொடரும் கடைசி மாந்தர் உடல் அரசியல் ஆகியவை இவர் பங்களித்த புத்தகங்கள் ஆகும்.