*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹410
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
வாழ்வில் முன்னேற வழி தெரியாமல் தவிப்பவர்களை கை பிடித்து அழைத்துச் செல்லும் நூல்.வாழ்க்கையில் பலரும் தேடும் வெற்றி என்பது உடனே கிடைத்துவிடுவதில்லை. அது தேடத் தேடக் கண்ணாமூச்சி ஆடும். விரக்தியடைந்து சோர்ந்துவிடும் நேரம் அவர்களின் கைகளுக்கு மிக அருகிலேயேகூட இருக்கும். இதனால்தான் ‘விடாமல் முயற்சி செய்’ என்கிறார்கள். விடாமல் முயற்சித்தால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம்.முன்னேற்றம் வேண்டும் என்பதை உணராதவர்கள் குறைவு. பலரிடமும் அதற்கான ஊக்கம் நிறையவே இருக்கிறது. ஆனால் வழி தெரியவில்லை.எப்படி முன்னேறுவது? அதற்கு ஏதும் நிச்சயமான வழிகள் இருக்கின்றனவா? அந்த வழியைப் பற்றி விளக்கமாகச் சொல்ல முடியுமா? என்கிற கேள்விகளுக்கான பதில்தான் இந்தப் புத்தகம்.‘நமது நம்பிக்கை’ மாத இதழில் தொடராக வந்து வாசகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்ற கட்டுரைகள் முழு புத்தகமாக இப்போது உங்கள் கையில். ஒரு Work Book போல படிப்படியாக என்ன எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் முயற்சி.Key Drivers Mile Stones மற்றும் Calendarising போன்ற நிர்வாக வழிமுறைகளை வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவது எப்படி என்பதை மிக எளிமையாக தெளிவாகச்சொல்லி வழிகாட்டுகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். இப்புத்தகம் உங்கள் கையில் இருந்தால் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் முதல் அடி எடுத்துவைத்து விட்டீர்கள் என்பது நிச்சயம்.+நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்கொள்வது எப்படி? இரு வழிகள் உள்ளன. உலகை மாற்றுவது. உங்களை மாற்றிக்கொள்வது. மாற்றம் என்பது உங்களிடமிருந்து தொடங்கவேண்டியது என்பதை வலியுறுத்தும் NLP என்ற அற்புதமான நிரூபிக்கப்பட்ட சர்வதேச வெற்றி ஃபார்முலாவை நம் சூழலுக்கு ஏற்ப எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்.NLP என்பது என்ன?· ஐம்புலன்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் முழுமையாகப் பயன்படுத்தவும் உதவும் Sensory Awareness.· எந்தச் சூழலிலும் வேண்டியதை அடையும் Oதtஞிணிட்ஞு கூடடிணடுடிணஞ். · பிடிவாதத்தைக் கைவிட்டு நெகிழ்வுத்தன்மையைக் கைகொள்ளும் Behaviour Flexibility.இந்த நான்கையும் கொண்டு பள்ளி கல்லூரி பணியிடம் குடும்பம் சமுதாயம் என்று எதிலும் பெருவெற்றி பெற இந்நூல் கற்றுக்கொடுக்கிறது. எங்கும் எதிலும் உன்னதம் வேண்டும் என்று விரும்பும் அனைவருக்குமான புத்தகம் இது. இதை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் பரிசளித்து மகிழலாம்.