*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹234
₹280
16% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
தமிழுக்குப் புதிய கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜே. பி. சாணக்யா வாழ்வை தனக்கே உரிய பார்வையுடன் எதிர்கொள்கிறார். அனுபவத்தைக் கலையாக்கும் ரகசியத்தை அறிந்த இவர் தனது நேரடி அனுபவப் பரப்பிற்குள் வராத வாழ்வின் யதார்த்தங்களையும் தேடிச் செல்வதன் அடையாளங்களை இந்தத் தொகுப்பில் காணலாம். சமகால வாழ்நிலை என்னும் தளத்திலிருந்து நகர்ந்து காலம் வர்க்கம் இனம் பால் பேதம் முதலான தடைகளைக் கடந்த வாழ்நிலைகளின் மீது சாணக்யா தன் கவனத்தைச் செலுத்துவதை இந்தக் கதைகள் காட்டுகின்றன. சாணக்யாவின் படைப்புலகின் எல்லைகள் விரிவடைந்து புதிய பாதைகளில் பயணிப்பதன் தடங்கள் இந்தக் கதைகள். 15 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் ஜே. பி. சாணக்யாவின் மூன்றாவது தொகுப்பு இது.