நாற்பது ஐம்பது ஆண்டுகள் வரக்கூடிய கால அளவில் கதாப்பாத்திரங்களே இல்லாமல் முழுக்கத் தன்மை ஒருமையில் எழுதப்பட்டுள்ள கதை ‘நான் காணாமல் போகும் கதை. ’ இந்த நாவல் கன¬வுயம் நினைவையும் கற்பிதங்களையும் சொல்லிக்கொண்டே வந்து கனவாலும் நினைவாலும் கற்பிதத்தாலும் ஆனது நமது ‘நான்’ என்பதை எளிய மொழியில் உணர்த்திவிடுகிறது. அறிஞர்களிடம் இருந்த மனவியல் இந்தப் புத்தகத்தில் வாழ்வு சார்ந்த கலை வெளிப்பாடாக ஆக்கப்பட்டுள்ளது. ‘அகராதி’யில் நாவல் எனும் சொல்லுக்குரிய பண்புப் பெயர்களாகப் புதிய புதுமை வாய்ந்த வியப்பளிக்கிற முன்னர் அறிந்திராத எனும் சொற்கள் தரப்பட்டுள்ளன. தமிழில் பொருளளவில் இதுவரை நாம் அறிந்திராத வியப்பளிக்கிற இந்தப் புத்தகம் தமிழ் நாவலின் செயற்பரப்பை விஸ்தரித்து ஆழப்படுத்தியுள்ளது. அம்ருதா ஆகஸ்ட் 2006
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.