*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹904
₹1145
21% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள்தான் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள். எதிர்த் திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கிட்டத்தட்ட ஓர் அசுரனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம்தான் ஔரங்ஸேப். ஒரே மொழி ஒரே மதம் மற்ற மதங்கள் யாவும் கீழானவை என்று அதிகார பீடம் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் வாழிடங்களையும் இடித்து அரச கோட்டைகள் கட்டுகின்ற ஒரு இருண்ட காலத்தில் அரக்கனாக பிம்பம் எழுப்பப்பட்ட ஓர் அரசனின் வாழ்வை வரலாற்றின் கல்லறைகளில் இருந்து தார்மீக அறத்துடன் சரியான தரவுகளின் மூலம் நாவலாக எழுதியிருக்கிறார் சாரு நிவேதிதா. பொதுவாக வரலாற்றுப் புனைவுகள் அலங்காரமான சொற்கள் மிகை வர்ணனைகள் நீளமான வாக்கியங்கள் கொண்டு எழுதப்படும். ஆனால் பாரமற்ற வாக்கியங்கள் எளிய சொற்றொடர்கள் மூலம் நேர்மையான பார்வையுடன் மிக அணுக்கமான சொல்லல் முறை வழியே ஒரு எதிர் அரசியல் பேசும் படைப்பைத் தந்திருக்கிறார் சாரு நிவேதிதா. காலத்திற்கு எதிராக ஒரு சீரிய கலைஞனின் பிரக்ஞை இப்படித்தான் வேலை செய்யும்.