நூல் ஆசிரியர் அன்பரசு மணி அவர் பிறந்த ஊர் செம்பாட்டூர். வளர்ந்த ஊர் குளத்தூர் புதுக்கோட்டை மாவட்டம் இப்ப வளர்ந்து கல்விப்பணியில் உதவிப் பேராசிரியராகப் வேலை பார்க்கிறார். அத்துடன் ஊர் சுற்றுவதும் உணவுகள் ருசிப்பதும முகம் தெரியாத மனிதர்களின் முகம் அறிந்து பழகுதல் என்று அவருடைய வாழ்க்கை நகரும் நட்சத்திரங்களாக நகர்ந்துப் போக நகர்ந்து சென்ற நட்சத்திரங்கள் அன்றொரு இரவில் தேவதையுடன் வந்து உன் எழுத்துக்கள் உணரும் பொழுதுகளில் ரசிக்கும்படி உள்ளது. உனது கற்பனை அலாதியாக மின்னுகிறது அந்த மின்னும் கற்பனைகளை வரிகளாக மாற்றி நட்சத்திரம் போன்று உனது ஐக்கூவை மிளிரச்செய் இந்த உலகிற்கு. இத்துடன் அன்பரசு மணி கவிதை கதை நாவல் என்று எழுதிக்கொண்டு இருக்கும் வரிசையில் நகரும் நட்சத்திரங்கள் என்ற ஐக்கூ இந்நூலை எழுதி உங்கள் பார்வைக்கு மிளிர செய்துள்ளார்..