ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒளவைப் பெருமாட்டி அருளிய மூதுரை 30-ம் நல்வழி 40-ம் 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நன்னெறியில் 30-ம் ஆக 100 வெண்பாக்களைப் பொறுக்கி எடுத்துஅதற்கு எளியநடையில் கருத்துரையும் எழுதி நல்வாழ்வுக்கு வழி'என்ற பெயரில் இந் நூலைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குகிறேன். நல்வழி நன்னெறி மூதுரை ஆகிய இம் மூன்று இலக்கி யங்களும் மிகச் சிறந்தவை. அரிய கருத்துக்களை எளிய நடையில் தெளிய உரைப்பவை: மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுபவை. நல்வழியில் நடந்து நன்னெறியில் நின்று மூதுரை கூறிய இம் மூதறிஞர்களைத் தமிழகம் ஒருபோதும் மறக்காது. என் தந்தையார் என் ஏழாவது வயதில் எனக்கு அளித்த செல்வங்கள் இவை. நாள்தோறும் ஒவ்வொரு வெண்பாவாக மனப்பாட்ம் பண்ணியவை.இதிலுள்ள அரிய கருத்துக்கள் நாளடைவில் என் உள்ளத்தைக் கவர்ந்தன; நன்கு பயன்பட்டன. சுருக்கமாகக் கூறவேண்டுமானால்இவை என் வாழ்வுக்கு வழிகாட்டின' என்றே கூறி விடலாம்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.