எண்பதுகளில் ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தபோது அதனை இலக்கியக் கோட்பாடு ரசனை மற்றும் விமர்சன தளங்களில் பதிவு செய்த படைப்பாளி மு. புஷ்பராஜன். பெரும் விவாதங்களை ஏற்படுத்திய க. கைலாச பதியின் அழகியல் குறித்த இரு முக்கிய கட்டுரைகளில் ஒன்று இத்தொகுப்பில் உள்ளது. அத்துடன் மேரி மக்தலீனா எம். எஸ். சுப்புலட்சமி தஸ்லீமா நஸ்ரீன் ஃப்ரீடா காலோ போன்றவர்களுக்கிடையிலான ஒப்புமைகளை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் எழுப்புகின்றன. மனசாட்சியின் கைதியான மு. புஷ்பராஜன் மிகுந்த சுய விமர்சன உணர்வு கொண்டவர். தனது நம்பிக்கைகளை எப்போதும் அசைத்துப் பார்க்கத் தயங்காதவர். இத்தொகுப்பு அதற்கான சாட்சியாக இருக்கிறது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.