இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பே உறவுகள் நிலைக்க காரணமாக அமைகிறது. அந்த அன்பின் ஆழமே நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று ஆகிறது. அது நாம் ஒருவர் மீது கொண்ட அன்பாக இருக்கலாம் அல்லது ஒரு பொருள் மீது கொண்ட பற்றாகக் கூட இருக்கலாம். எந்தவொரு சூழ்நிலையிலும் நம்மால் அவற்றை விட்டுக்கொடுக்க இயலாது.கடவுளின் சிறந்தப் படைப்பு மனிதன்.அம்மனிதன் உள்ளத்தில் பூக்கும் அன்பே இவ்வுலகம் தேடும் தேடல்களாக அமைகிறது. நீ இன்றி நான் இல்லையே என்ற தொகுப்பில் எழுத்தாளர்கள் தங்கள் கவிதையினை நண்பர்கள் தோழி தனிமை கல்வி கணவன் மனைவி ஆசான் நம்பிக்கை மற்றும் தன் காதல் என இவைகளைப் பற்றி இப்படைப்பில் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்திய உள்ளார்கள்…