கதை சுருக்கம் என சொல்வதை விட இந்த கதையை பற்றி குறிப்பிட தக்கவை என சொல்வதே சரி - நீரின் நிழலில் ஹிஸ்டரியும், ஃபேண்டஸியும் கையாள பட்டிருக்கு, ஹிஸ்டரி என்றால் உண்மையை தழுவியா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை, இது வேறு கிரகத்தில் நடக்கும் கதை, இதில் அவ்வப்போது திருப்புமுனைகளும் வந்து போகும், கதை படிக்கும் போதே ஏதோ ஒரு மர்மங்களிலும், கேள்விகளிலும் பயணித்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு தோன்றும், திரைக்கதையில் மட்டுமே வருவது போல் கதையை மாற்றி - மாற்றி எந்த கோணத்தில் சொன்னாலும் புரியும் படி எழுதப்பட்டிருக்கிறது, எழுத்து முறை வித்தியாசமாக இருந்தாலும் படிக்கும் போது எந்த விதத்திலும் குழப்பம் அடைய செய்யாது, ஒருவரின் பாய்ன்ட் ஆஃப் வீயுவில் எழுதியதால் படிக்கும் போது அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தெரியுமோ, என்ன பார்த்ததோ, என்ன கேள்வி பட்டதோ அதை தான் அந்த கதாப்பாத்திரம் பேசும், ஆதலால் அதே மனநிலையில் படிப்பது சிறந்தது, நீர் எனும் எலமெண்ட்டை நன்றாக கையாண்டு எழுத பட்டிருக்கிறது, மாயாஜாலங்களோடு நிறைய ஆச்சரியங்களும் இருக்கலாம் படித்து முடிக்கும் போது.
Kadhai surukkam ena solvadhai vida indha kadhaiyai patri kurippida thakkavai ena solvadhae sari - Neerin nizhalil history-yum, fantasy-yum kaiyaala pattirukku, history endraal unmaiyai thazhuviyaa? Endru kaettaal nichchayamaaga illai, idhu vaeru gragaththil nadakkum kadhai, idhil avvappodhu thiruppumunaigalum vandhu pogum, kadhai padikkum bodhae aedho oru marmangalilum, kaelvigalilum payaniththu kondirukkirom endra unarvu thondrum, thiraikkadhaiyil mattumae varuvadhu Pol kadhaiyai maatri - maatri endha konaththil sonnaalum puriyum padi ezhudhappattirukkiradhu, ezhuththu murai viththiyaasamaaga irundhaalum padikkum bodhu endha vidhaththilum kuzhappam adaiya seyyaadhu, oruvarin point of view-vil ezhudhiyadhaal padikkum bodhu andha kadhaappaaththiraththirku enna theriyumo, enna paarththadho, enna kaelvi pattadho adhai dhaan andha kadhaappaaththiram paesum, aadhalaal adhae mananilaiyil padippadhu sirandhadhu, neer enum element-tai nandraaga kaiyyaandu ezhudha pattirukkiradhu, maayaajaalangalodu niraiya aachchariyangalum irukkalaam padiththu mudikkum bodhu.