*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹419
₹450
6% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ஒவ்வோர் இளைஞனும் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். போராட்டங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நேரக்கூடும். எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ளது அவரது வாழ்க்கை. - நீதியரசர் ப. சதாசிவம் ஆளுநர் கேரள மாநிலம் * அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று சிறந்த நிர்வாகத்தை வழங்கியது மட்டுமின்றி மிகவும் நேர்மையாகச் செயல்பட்டவர் திரு.பாலகுருசாமி. அவருடைய வாழ்க்கையை ஒருவர் படித்துப் பின்பற்றினாலே போதும் தானும் முன்னேறுவதோடு சமூகத்தையும் முன்னேற்றலாம். - டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் விஞ்ஞானி * பாலகுருசாமி மிகுந்த திறமைசாலி அறிவாற்றல் மிக்கவர் எளிமையானவர். அவரைப் போல் நேர்மையானவர் கிடைப்பது அரிது. - டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி நிறுவனர் - தலைவர் பிஎச்இஎல் * நூலாசிரியர் முனைவர் பா. கிருஷ்ணன் இதழியல் துறையில் 35 ஆண்டுகள் பயணம் செய்தவர். கவிதை கதை ஆய்வு செய்திக் கட்டுரை என்று தடம் பதித்தவர். இது இவரது நான்காவது நூலாகும்.