இருபது ஆண்டுகளுக்கு முன்பு 'புகை நடுவில்' என்ற நாவலை எழுதி தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமான 'கிருத்திகா' (ஸ்ரீமதி மதுரம் பூதலிங்கம்) உளவியல் அடிப்படையில் கதை மாந்தர்களின் செயல்களை ஆராய்வது மூலம் கதை சொல்லுவதில் நிபுணர். ஹிஜிளிறிமிகி என்று சொல்லப்படும் வருங்கால உத்தம உலகைச் சித்திரிக்கும் உத்தியைக் கையாள்வதில் இன்றைய அரசியல் சமுதாய நிலையின் சீர்கேடுகளை எடுத்துக்காட்டி லேசாகப் பரிகாசம் செய்வது இவருடைய நாவல்களின் சிறப்பு அம்சம்.'சத்தியமேவ' 'தர்மக்ஷேத்ரே' 'புதிய கோணங்கி' என்ற நாவல்களில் ஒரு கற்பன