பொதுச் சமூகம் ஏற்காது என்பதால் சாத்தியமானதை மட்டுமே வணிக சினிமா பேசும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன்படி சாத்தியமின்மைகளை சாத்தியமில்லாமல் போனதற்கான காரணங்களை விவாதித்திருப்பதன் மூலம் அந்த விடுபடல்களையெல்லாம் இணைத்து ஒரு வரலாற்றுச் சித்திரத்தை வரைய முயற்சித்திருக்கிறது இந்த நூல். ஒரு திரைப்பிரதி ஓர்மையோடு அமைகிறபோது புலப்படும் அரசியலைவிடவும் ஓர்மையில்லாமல் சொல்லிவிடுகிற ‘இயல்பான’ தருணங்களிலேயே சமூக அரசியல் புலப்பட்டிருக்கிறது. இந்த நூல் அத்தகைய தருணங்கள் மீது கவனம் செலுத்தி தன்னுடைய வாசிப்பை நிகழ்த்த முற்பட்டுள்ளது.