அனுபவம் என்பது ஒன்றுமில்லை எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதுதான் என்ற மகத்தான உண்மையை உலகிற்கு சொன்னவர் கவிஞர் கண்ணதாசன். அனுபவம் என்பது நமக்கு நேர்பவை மட்டுமில்லை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நேர்பவையுமே என்ற அடிப்படையில் என் சிற்றறிவிற்கு எட்டி என்னை வியக்க வைத்த சிந்திக்க வைத்த வதைத்த நம்பிக்கையை அடியோடு பிடுங்கி மண்ணோடு புதைத்த மீண்டும் துளிர்க்க வைத்த எண்ணற்ற அனுபவங்களின் நயமிகு வெளிப்பாடே (முயற்சியே) இப்புத்தகம்.