மந்த்ரா தருணேஷ் இருவரும் ஒரே புகைப்பட நிறுவனத்தில் ஆறு மாதங்கள் சேர்ந்து பணிபுரிந்து கொண்டு வந்தனர்.மந்த்ராவை சந்தித்த சில நாட்களிலேயே அவள்மீது காதல் கொள்கிறான் தருணேஷ் ;தன் காதலை மந்த்ராவிடம் வெளிப்படுத்த சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்து கொண்டிருந்தான். அவர்களின் முயற்சியால் இருவரும் ‘சிங்கப்பூர் புகைப்பட போட்டியில்’ பங்கு கொள்ள சென்றனர்;அருமையாக போட்டியில் ஈடுபட்டு மந்த்ராவும் தருணேஷூம் வெற்றி கண்டனர். வாழ்க்கையில் தன்னுடைய முதல் காதலான அவினாஷை இழந்தபிறகு அவன் இடத்தை மாற்றியமைக்க யாராலும் இயலாது என்று நினைத்துக் கொண்டிருந்தாள் மந்த்ரா!ஆனால்தருணேஷூடன் பழக பழக மௌனமாய் அவன்மீது காதல் கொள்கிறாள்.ஒருநாள் இருவருக்குள் இருக்கும் ஆழமான அழகான காதல் அவினாஷின் நினைவிடத்தில் மந்த்ராவையும் ♡ தருணேஷையும் ஒன்று சேர்த்து வைத்தது! “நினைவும் காதலும்”......உன்னதமான காதல் உண்மையாக நேசிக்கும் இரு இதயங்களையும் நிச்சயமாக வாழ்க்கையில் சேர்த்து வைக்கும்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.