சில வழிப்போக்கர்கள் தமிழ்க் குட்டிகள் அத்தாச்சிகள் என எல்லோரும் கு.வி.யின் வரிகளில் உணர்வுகளைச் சுமந்தபடி வலம் வருகிறார்கள். வரிகளின் நிகழ்வுகளை வாசிக்கும் தருணத்தில் நாம் அறியாமலே அச்சுமையை நம்மீது இறக்கி விடுகிறார்கள். நமக்குத்தான் மூச்சுத் திணறிவிடுகிறது. அதனாலேயே நான் முன்னரே சொன்னபடி ஆசுவாசப்படுத்தி ஆசுவாசப்படுத்தி மீண்டு வந்துதான் வாசிப்பைத் தொடர முடிந்தது. எழுத எத்தணித்தால் ஒவ்வொரு கவிதைக்கும் பல பக்கங்கள் எழுதலாம். ஆனால் அவற்றை உங்கள் நோக்கில் நுகர்ந்துணர வேண்டும் என்பதாலேயே எண்ணற்ற உணர்வுச் சுமைகளை உங்களிடம் கடத்துகிறேன். -நல்லு லிங்கம்