ஒரு துப்பறியும் புதினம். அதற்குள்தான் எத்தனையெத்தனை திருப்பங்கள். திருப்பங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் மட்டுமா கதையில் இருக்கின்றன. தேசப்பற்றும் ஒரு சிறுவனின் உயிர்த் தியாகமும் சேர்ந்து படிப்பவர்களின் மனங்களை நெகிழச் செய்யும் சென்டிமெண்ட்டும் உள்ளீடாக இருக்கிறது. அசல் தங்கத்தில் செய்து வைரமிழைத்த முருகன் சிலையைக் காப்பாற்றப் புறப்படும் துப்பறியும் ரமணன் எதிர்கொள்ளும் ஆபத்துகள்தான் எத்தனையெத்தனை! சொல்லித் தீராது அதனால் கதையில் ஏற்படும் விறுவிறுப்பை. படித்து உணருங்கள்.