ஓர் அரசு அலுவலகத்தில் எளிய குமாஸ்தாவாகத் தன் பணியை ஆரம்பித்தவர் சங்கர். மேலதிகாரிகளின் மனம் கோணாமல் கொடுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்துகொண்டு வாழ்ந்திருந்-தால் எல்லோரையும்போல் அவரும் நிம்மதியாகத் தன் பணியைத் தொடர்ந்திருக்கலாம். அவருடைய மனச்சாட்சி முழுவிழிப்புடன் இருந்ததால் தன்னைச் சுற்றி நடைபெறும் தவறுகளையும் அதிகார முறைகேடுகளையும் அமைதியாகக் கடந்துசெல்ல அவரால் இயலவில்லை. சூழல் அவரை உந்தித் தள்ளியது. அதன் விளைவாக சமூகத்துக்கு ஒரு சமரசமற்ற போராளியும் அதிகாரவர்க்கத்துக்கு ஒரு நம்பர் 1 எதிரியும் ஒரே சமயத்தில் கிடைத்தனர். அரசியல் பிரமுகர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் என்று தொடங்கி தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாகப் பலருடைய உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் வெளியில் வந்தபோது தன் வாழ்வை அடியோடு மாற்றியமைக்கும் ஒரு பெரும் புயலை சங்கர் சந்திக்க நேர்ந்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் அவருடைய அரசுப் பணியைப் பறித்துக்கொண்டதோடு அவரைச் சிறையிலும் தள்ளி அவர் எதிர்காலத்தையே கேள்விக்குரியதாக்கியது. காவல்துறை தொடங்கி சைபர் கிரைம் பிரிவு முதல் சிபி-சிஐடி வரை ஒரு பெரிய பலமிக்க குழு சங்கரை வேட்டையாட ஆரம்பித்தது. தொடர் வேட்டை அதிலிருந்து மீள சங்கர் முன்னெடுத்த தொடர்ச்சியான போராட்டம் இரண்டையும் உணர்வுபூர்வமாக ஆவணப்படுத்துகிறது இந்நூல். ஒரு தனி மனிதனுக்கு எதிராக அரசு இயந்திரம் தொடுத்த போரின் அசாதாரணமான கதை இது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.