தலைப்பிலேயே ஓர் அசம்பாவிதத்தைச் சொல்லி வாசகரைத் தயார்ப்படுத்தி பாதிக் கதை வரையில் அது நிகழாமல் என்னடா இது என்று குழம்ப வைத்து தற்கொலை நிகழ்ந்தபின் வரும் சம்பவங்களின் மூலம் அது கொலை என்று கண்டுபிடிக்கப்பட்டு நிறைவடையும் சஸ்பென்ஸ் கதை நிச்சயம் படிப்பவரைக் கவரும். ஏன் கொலை யாரால் கொலை என்கிற இரண்டு கேள்விப் பிடிகளைப் போட்டு க்ளைமாக்ஸ் வரையில் வாசகரைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதில் வென்றிருக்கிறார் ரா.கி.ர.