அனுபவங்களே படைப்பின் ஊற்றுக் கண். கலை நோக்கு அந்த ஊற்றுக்கண்ணைக் கீறிவிடும் கருவி. ஒரு படைப்பு தீவிரமாக வாசிக்கப்படும்போது புதிய அனுபவங்களை வழங்குவது போலவே படைப்பூக்கத்துடன் எதிர்கொள்ளப்படும் ஒரு அனுபவம் புதிய தரிசனங்களையும் புதிய படைப்புகளுக்கான விதைகளையும் வழங்குகிறது. படைப்பாளியாகவும் விமர்சகராகவும் செயல்பட்டுவரும் பாவண்ணன் தன் அனுபவங்களைப் படைப்பூக்கத்துடன் எதிர்கொண்டதன் தடயங்களை இந்த நூலில் காணலாம். வாசிப்பும் படைப்பும் தரும் அனுபவங்கள் நூல்களின் வெளிக்குள் முடிந்து விடுபவை அல்ல என்பதை உணர்த்தும் தரிசனங்கள் இந்த எழுத்துக்களில் ஒளிர்கின்றன. வாழ்க்கை என்னும் மாபெரும் கதையாடலின் ஆச்சரியங்களைப் புனைவு தவிர்த்த எழுத்தின் மூலம் திறந்து பார்க்கிறார் பாவண்ணன். யதார்த்தமே எவ்வளவு பெரிய புனைவாக இருக்கிறது என்னும் வியப்பை ஏற்படுத்தக்கூடிய நூல் இது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.