*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹189
₹220
14% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம் காட்டும்போது நம்மிடம் அதன் சுயசரிதையைத் தெளிவான ஒரு மொழியில் சொல்கிறது - இது நோபல் பரிசு பெற்ற ஹெஸ்ஸேவின் வரிகள்... இந்த நெடுங்கதையின் நாயகி பாண்டிச்சி அப்படி ஒரு மரமாகத்தான் கிளைவிரித்து நிற்கிறாள். தனிமரமல்ல; அவளுக்குள் ஒரு பெருவனம் இருக்கிறது. அவளது குரல் பறவைகளின் மிருகங்களின் குரலாக ஒலிக்கிறது. அவளது சிரிப்பு மூங்கில்களின் முளையரிசிகளாக காடெங்கும் சிந்திக்கிடக்கிறது. அவளது அடிமன வேர்களில் மழை நிரம்பும் இசையில் மலர்கள் அசைந்தாடுகின்றன. திருமணத்திற்கு முன்பே மணமகன் வீட்டு மனிதர்களுடன் பழகுதல்... திருமணம் பிடிக்கவில்லையெனில் மறுப்பதற்கு பெண்ணுக்கே அதிகாரம்... மனத்தூய்மை கொண்டவர்கள் மட்டுமே குழிமாடங்களில் விளக்கு வைக்கும் வழக்கம் - இப்படி மலையகத்தின் மண்ணுக்கும் பெண்ணுக்கும் சேதாரம் இல்லாத வாழ்வை மட்டுமே அந்த வனதேவதை ஆசீர்வதிக்கிறாள். பச்சைப் பசும்வனம்... பாண்டிச்சியின் மனம்... எது அழகு? இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றான பேரழகுதான் இந்தக் கதைவெளி.