*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹126
₹150
16% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
இது ஒரு பயணக்கட்டுரை. எங்கெங்கு போனோம் என்று வரிசைக்கிரமமாக விபரம் கொடுக்கும் உப்பு சப்பில்லாத நாட்குறிப்பு அல்ல. படிப்பவர்களை கூடவே அழைத்துச் செல்லும் அனுபவக் கட்டுரை. ஒவ்வொன்றையும் நுணுக்கமான பார்த்து நகைச்சுவையாக விவரிக்கும் கட்டுரை. பாலைவனங்கள் நிறைந்த எகிப்து நாடு. பனிச்சிகரங்கள் கொண்ட சிக்கிம் மாநிலம். இரண்டு இடங்கலுக்கும் சுற்றுலா சென்று வந்ததைப் பற்றிய பதிவு இது. சுவாரசியத்துக்கு உத்திரவாதம் உண்டு. நந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கல்லூரி நாட்களிலிருந்தே எழுதத் துவங்கியவர். ஏழெட்டு வருடங்கள் எழுதி விட்டு அலுவலக பனிச்சுமைகள் காரணமாக தற்காலிகமாக எழுதுவதை நிறுத்தி விட்டு இப்போது மறுபடியும் எழுத வந்திருக்கிறார். நெசவியலில் பி.டெக் பட்டம் பெற்று அரசு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்ற இவர் தற்போது வசிப்பது சென்னை. வாழ்வியல் கதைகள் எழுதி பல சிறுகதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றிருந்தாலும் இவரது பலம் நகைச்சுவை தான். சம்பவங்களை யாரும் புண்படாத வகையில் விரசமில்லமல் நகைச்சுவையாக விவரிப்பது இவரது பாணி. தமிழில் வந்து கொண்டிருக்கும் அத்தனை பத்திரிகைகளிலும் இவரது படைப்புகள் பிரசுரம் கண்டு கொண்டிருக்கின்றன. குமுதம் பத்திரிகையில் இவர் எழுதி வரும் மிஸ்டர் எக்ஸ் கதைகள் மிகவும் பிரபலம். பிடித்தது பயணம். எலெக்ட்ரானிக் உபகரணங்கள். பிடிக்காதது எதிர்மறை சிந்தனைகள்.