*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹340
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
மிகக் கவனமாக பால் இறைச்சி கொழுப்பு இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன? பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு உடல் பயிற்சி செய்து கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் நோய்களையும் கட்டுப்படுத்தமுடியவில்லை?ஏனென்றால் நீங்கள் இதுவரை கடைப்பிடித்த வழிமுறைகள் தவறானவை மட்டுமல்ல நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இனி நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். நாகரிகம் என்று நீங்கள் கருதும் இன்றைய உணவு கலாசாரத்தில் இருந்து உங்களை விடுவித்துக்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று ஆதி மனிதனின் உணவு வழக்கத்துக்குத் திரும்பவேண்டும்.ஆம் உங்களுக்குத் தேவை உலகம் முழுவதிலும் புகழ்பெற்ற நம்பகமான அறிவியல்பூர்வமான பேலியோ டயட். கொழுப்பு எடை கூடும் என்றெல்லாம் பயந்து நீங்கள் இதுவரை ஒதுக்கிவைத்த பல முக்கியமான உணவுப் பொருள்களை இனி தங்குதடையின்றி உட்கொள்ளலாம். அதே சமயம் ஆரோக்கியமானது சத்தானது என்றெல்லாம் கருதி நீங்கள் உணவில் சேர்த்துவந்த பல உணவு வகைகளை இனி நீங்கள் ஒதுக்கி வைக்கவேண்டும்.இந்த பேலியோ டயட்டுக்கு நீங்கள் மாறுவதன்மூலம் உடல் எடையைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும்.உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் பேலியோ டயட் முறையை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைத்து தகுந்த பின்னணியுடன் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் நியாண்டர் செல்வன்.ஃபேஸ்புக்கில் பல்லாயிரம் பேரால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு பின்பற்றப்பட்டுவரும் வெற்றிகரமான டயட் முறை இது.+‘டயபட்டீஸ் வந்தால் ஜென்மத்துக்கும் மாத்திரை எடுத்துக்கொண்டு சமாளிக்கலாமே தவிர அதைப் பூரிணமாகக் குணப்படுத்த முடியாது!’ என்பதுதான் மக்களிடையே காலம்காலமாக நிலவும் கருத்து. ஆனால் அது உண்மையில்லை.நீரிழிவிலிருந்து முற்றிலுமாக விடுபடுவது நூற்றுக்கு நூறு சாத்தியமே என்பதை இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது. நாற்பதாண்டுகால அனுபவம் கொண்ட டாக்டர் எஸ்.விஜயராகவனின் வழிகாட்டுதலின்பேரில் நூலாசிரியர் சுஜாதா தேசிகன் நீரிழிவிலிருந்து விடுபட்டுக் காட்டிஇருக்கிறார். இந்த அதிசயம் எப்படிச் சாத்தியமானது என்பதையும் தெளிவாக எளிமையாக இதில் பதிவு செய்திருக்கிறார்.முற்றிலும் அறிவியல்பூர்வமான நிரூபிக்கப்பட்ட இந்த வழிமுறையை யார் வேண்டுமானாலும் பின்பற்றமுடியும். நீரிழிவுக்கு நிரந்தரமாக குட் பை சொல்லமுடியும்.கல்கியில் தொடராக வெளியானபோதே வாசகர்கள் மத்தியில் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுவிட்ட நூல் இது. இந்நூல் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் நீரிழிவிலிருந்து நிரந்தரமாக மீண்டுவிட்டீர்கள் என்பது நிச்சயம்.