பள்ளிக்கூட கனவுகள்’ இந்த புத்தக்கத்தின் பெயரை கேட்கும் போதே அனைவருக்கும் நினைவில் வருவது நம்முடைய பள்ளிக்கால வாழ்க்கை அனுபவங்கள் தான். பள்ளி வாழ்க்கையை மட்டுமே கருப்பொருளாக கொண்டு இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. முதல் அழுகையில் துவங்கி முதல் காதல் வரை அத்தனையும் எழுத்து வடிவில் அமைந்துள்ளது. இப்புத்தகத்தை படிக்க படிக்க உங்களின் பள்ளி வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் அரங்கேறியே தீரும். காலங்கள் கடந்து விடினும் நம் இளமை பருவங்கள் என்றும் இளமையாய் வாழ்ந்து கொண்டே இருக்கிறது நம்முள்.