*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹217
₹250
13% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
சாதி, மதம், மொழி, இனம், நிறம் ஆகிய ஏற்றத்தாழ்வுகளால் உலகம் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டபோது உரிமைக் குரல் கொடுத்த சீர்திருத்தச் செம்மல்கள் வரிசையில் ஏறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சமூக மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவர் அயோத்திதாசப் பண்டிதர். கல்வி உரிமை, சாதி ஒழிப்பு, சமத்துவம், சகோதரத்துவம், இட ஒதுக்கீடு, பவுத்தம், பகுத்தறிவு, பெண் விடுதலை, இந்துமத எதிர்ப்பு போன்ற முற்போக்கு அரசியலுக்கு இந்திய அளவில் பெரும் பங்களிப்பு செய்தவர் அயோத்திதாசப் பண்டிதர். சனாதனவாதிகளால் வரலாற்றில் அயோத்திதாசப் பண்டிதர் மறைக்கப்பட்டிருந்தார். இருட்டிப்பு செய்யப்பட்டிருந்தார். அறிவின் எழுச்சியில் தற்போது வரலாற்றில் மறைக்க முடியாத ஆளுமையாக அயோத்திதாசப் பண்டிதர் உச்சத்தில் நிற்கிறார். 1. காத்தவராயன் (என்கிற) அயோத்திதாசர். 2. ஒரு பைசாத் தமிழன் இதழ் பணிகள். பவுத்த இலக்கியங்கள் 3. சாதி சமய சடங்குகள். 4. தமிழகத்தில் பவுத்தம்.