மதவாச்சியில் 1980ம் ஆண்டில் எனக்கு மிகச் சாதாரணமான சிங்கள மக்கள் மத்தியில் வேலை செய்யக் கிடைத்த அனுபவங்கள் வண்ணாத்திக்குளத்தில் மட்டுமல்ல பிற்காலத்தில் எழுதிய கானல்தேசத்திற்கும் உதவியது. தமிழகத்தில் எண்பத்தி நாலாம் ஆண்டு இறுதிப்பகுதியில் பண்ணையொன்றில் கிடைத்தவேலை இந்த நாவலுக்குக் கருப்பொருளாகியுள்ளது. வாழ்ந்த இடங்கள் ஒரு நாவலாசிரியனாகத் தகவல்களைப் பெறுவதற்கு மட்டுமல்ல எனது சிந்தனையின் ஓட்டத்தை மாற்றுவதற்கும் உதவியது. இவைகள் எனக்கு உயர்கல்வி கற்கக் கிடைத்த பல்கலைக்கழகங்கள். இங்கு சாதாரண மனிதர்களே பேராசிரியர்கள் . யாழ்ப்பாணத்தின் மத்தியத்தர குடும்பத்தில் பிறந்து பேராதனைப் பல்கலைக்கழகம் சென்ற எனக்கு இப்படியான இடங்களில் கிடைத்த அனுபவங்கள் என்னையறியாது என்னில் பலமாற்றங்களை ஏற்படுத்தியது. அதிலும் இளமையில் எனக்குக் கிடைத்த கல்விபோல் இவை பேருதவி புரிந்தன. இந்த அனுபவங்கள் என்னையே செதுக்கின. தமிழகத்தில் உள்ள பண்ணை ஒன்றில் நான் கண்டவையில் முக்கியமானது சாதிரீதியான ஆழமான பிரிவுகள். இலங்கையில் உள்ளதையும் விட வித்தியாசமானவை. ஆழமானவை. அவற்றின் பாதிப்புகள் தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை நிழலாகத் தொடர்கின்றன. அவை இறப்பு போல் நிரந்தரமானவை. நான் கண்ட உண்மை இப்பொழுது பிராமணர் போன்ற உயர்சாதியினரைவிட ஒடுக்குமுறையில் ஈடுபடுவது வன்னியர் நாடார் தேவர் போன்ற இடைச்சாதியினரே. அவர்களே எண்ணிக்கையில் அதிகமாகவும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதற்குப்
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.