கண்ணதாசன் மீரா கவிக்கோ அப்துல் ரகுமான் வைரமுத்து அறிவுமதி போன்ற புதுக்கவிதை கவிஞர்கள் சகல பரிமாணங்கள் காட்டினாலும் புதியவர்களும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு லீலா லோகநாதன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒவ்வொரு கவிதையும் வாழ்க்கை பக்கங்களின் சிறு துணுக்கு. உணர்வோட்டத்தின் வெளிப்பாடு. சாரலின் தீண்டலின் சுகம். இந்த உணர்வுகளில் ஏதோவொன்று படைப்பாளியின் மனமேடையில் நடந்திடும் நர்த்தனமே கவிதைகளின் கருவானது. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டமாய் இந்த பூவைக்குள் இத்தனை கவிதைக்கனிகளா என எண்ணி வியக்கிறேன். சலசலவென்று ஓடும் நதிக்குள் மூழ்கி எழுந்த கணத்தில் வந்து மோதும் குளிர்ச்சி வாசனை சுவை இவர் கவிதைகளை படிக்கும் போது ஏற்படுகிறது. லீலாவின் கவிதைகளின் மைய அச்சு மனிதநேயம் தாய்மை இவற்றைச் சுற்றியே இவரது கவிதைகள் சுழல்கின்றன. -கவிதாயினி காந்திமதி செல்வரத்தினம் சந்திரோதயம் நிறுவனர் இராஜபாளையம்
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.