நவீன இந்தியாவின் மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப்புரட்சியின் நோக்கங்களையும் பலன்களையும் இந்த நூல் கேள்விக்கு உட்படுத்துகிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்காவிட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோர தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுக்களின் பெறுமானம் என்ன என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது. இந்தியாவின் மரபு சார்ந்த வேளாண்மை அதன் அலாதியான சிறப்பம்சங்கள் அது திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்ட விதம் ஆகியவை பற்றியும் விரிவாகவும் உரிய ஆதாரங்களுடனும் இந்நூல் பேசுகிறது. வறுமை பஞ்சம் வரப்பிரசாதம் எனப் பல்வேறு கிளைக் கதைகளைக் கொண்ட பசுமைப்புரட்சியின் நிஜக் கதையை அம்பலப்படுத்துகிறது இந்நூல். இந்திய வேளாண்மையைக் காப்பாற்ற இனி என்ன செய்ய முடியும் என்பது குறித்த நடைமுறை சார்ந்த யோசனைகளையும் இந்நூல் முன்வைக்கிறது. விரிவான வாசிப்பு ஆழமான அக்கறை களப்பணி சார்ந்த அனுபவம் ஆகியவற்றினூடே இந்திய வேளாண்மையைக் குறித்த ஆழமான விவாதங்களை சங்கீதா ஸ்ரீராம் முன்வைக்கிறார். சமூக அக்கறையும் தன்னார்வத் தொண்டுள்ளமும் கொண்ட இவரது இந்த நூல் நம் மண்ணையும் மக்களையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க உதவுகிறது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.