இயற்கை வழி பேரழிவுகள் அசாதாரணமானவை. அவற்றை உணர்ந்தறியும் திறன் சிறு பிராணிகளுக்கும் பறவைகளுக்குமே உண்டு. மனிதருக்கில்லை இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியத் தமிழ் கிராமமான தென்னமரவாடியில் 1984ஆம் ஆண்டு நடக்கவிருந்த அனர்த்தத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கு அந்தக் கிராமத்தவர்களுக்கு எந்தச் சாத்தியமுமில்லை. மனிதர்களே மனிதர்கள்மேல் கட்டவிழ்த்துவிட்ட அசம்பாவிதம் அது. ஈழத்தமிழர் வரலாற்றில் தனிப்பட்ட ஒருவர் வாழ்க்கையிலோ பொதுவிலோ நிகழ்ந்த பல்லாயிரக்கணக்கான துர்க்கதைகளில் பெரும்பாலானவை இனவாதத்தின் கோரைப்பற்களால் குதறப்பட்ட சாமானியரின் ஜீவிதத்தைச் சொல்லித் தீர்ப்பவை. அவை எதுவுமே கொண்டாடப்படக்கூடிய கதைகளல்ல. அவற்றில் இதுவும் ஒரு கதை
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.