*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹229
₹249
8% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
அலைகள் ஓயாமல் இருந்தால் தான் பார்க்க பரவசம். ஆனால் பேய்கள் ஓயாமல் இருந்தால்? பேய்கள் ஓய்வதில்லை என்று ஆசிரியர் கூறி பீதியை கிளப்புகிறாரே? அது நல்ல பேயா? கெட்ட பேயா? காமெடி பேயா? அதி பயங்கர பேயா?என்ன? என்ன? கே. பி சுந்தராம்பாள் மாதிரி என்ன என்ன என கேட்காமல் இருக்க எடுங்கள் புத்தகத்தை! கண்டுபிடியுங்கள்! என்ன புரிகிறதா? நத்தம். எஸ். சுரேஷ்பாபு (தளிர் அண்ணா) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் 73. நத்தம் கிராமத்தில் வசிக்கும் எஸ். சுரேஷ்பாபு சிறு வயது முதலே எழுத்தார்வம் கொண்டவர். படிக்கும் காலத்தில் சிறுவர்களுக்கான கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய அனுபவம் கொண்டவர். இவரது கதைகள் இந்து மாயாபஜார் கோகுலம் பொம்மி சிறுவர் இதழ்களில் வெளிவந்துள்ளன. தளிர் என்ற சிறுவர் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய படியாலும் தளிர் கல்வி நிலையம் என்ற டியுசன் செண்டர் நடத்தியதாலும் சிறுவர்களிடையே அன்பாக தளிர் அண்ணா என்று அழைக்கப் பட்டார். அதையே தனது புனைப்பெயராகவும் வைத்துக் கொண்ட சுரேஷ்பாபு இதுவரை நூற்றுக் கணக்கான சிறுவர் கதைகளையும் சிறுவர்களுக்கான செவிவழிக்கதைகளையும் தன்னுடைய பாணியில் எழுதியுள்ளார். தேன்சிட்டு என்ற மின்னிதழையும் சில காலம் நடத்தியுள்ளார். தற்சமயம் நத்தம் கிராமத்தில் உள்ள திருவாலீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகராக பணியாற்றி வருகின்றார். சிறுவர் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்து சிறப்பான படைப்புகளை தந்து சிறுவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே இவருடைய ஆசை.