*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author

பெருமூச்சு! வெற்றிப் பெருமூச்சு வேதனைப் பெருமூச்சுபொறுமைப் பெருமூச்சு ஏளனப் பெருமூச்சு எனப் பெருமூச்சுகள் எத்தனையோ வகையானவை.

பெருமூச்சு ! திராவிட முன்னேற்றக் கழகத்தவர் இன்று தம் தொண்டு இலட்சியத்திற்கான உழைப்பு ஈடேறியுள்ளதைக் கண்டு உவகையால் வெற்றிப் பெருமூச்சு விடுகிறர்கள்!

திராவிடத்தின் எதிரிகள் பொறுமைப் பெருமூச்சு விடுகிறார்கள்.

தேர்தல் வியாபாரிகள் 'ஐயோ நமக்குப் பயன்படவில்லையே இவர்கள் என்று வேதனைப் பெருமூச்சு விடுகிறர்கள்.

நம்மால் ஆகாத ஆக்கமுடியாத காரியத்தை யெல்லாம் இந்தச் சிறுவர்கள் (!) செய்து முடிக்கிறார்களே!' என்றும் சிலர் ஏளனப் பெருமூச்சு விடுகிறர்கள் !

பெருமூச்சு! பலப்பல வகைகளிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு குறிப்பாக சென்ற கிழமை சென்னையிலே இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர் கூடி நடத்திய மாநில மாநாடு நடைபெற்றதன் எதிரொலி !

பெருமூச்சு! வெற்றிப் பெருமூச்சு ! வீரர் கோட்டத்தின் பெருமூச்சு! திராவிடத்தின் வாழ்வில் உயர்வில் உயிரைப் பணயமாக வைத்துள்ள இளை ஞரின் இலட்சிய இதயம் படைத்த சிறுவர்களின்(!) வெற்றிப் பெருமூச்சு !

பெருமூச்சு! இளைஞர் கலைஞர் கருணாநிதியின் பெருமூச்சைப் படைக்கும் பணியில் ஈடுபட்டதற்கு அதற்கு வாய்ப்பளித்த கலைஞர் கருணாநிதிக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம்.