ஒரு பெரும் மழையிலிருந்து ஒரு துளியை எடுத்து அதை நுண்ணோக்கி மூலம் பார்க்கும் ஒரு தன்மை தான் இந்தப் பின்னல் விசை சென்னை வாழ்க்கையின் அன்றாடத்தில் நடக்கும் ஆயிரம் ஆயிரம் கதைகளிலிருந்து ஒருவர் வாழ்க்கை எப்படி இன்னொருவருவது வாழ்க்கையோடு தெரிந்தோ தெரியாமலோ பின்னப்படுகிறது என்பதை மையமாகக் கொண்டு ஒரு நிகழ்வின் விசை எப்படியொரு பெண்ணின் வாழ்க்கையை மாற்றித் தீர்மானிக்கிறது என்பதை சொல்கிறது. கதை பாத்திரங்கள் ஒவ்வொன்றும் இந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பே. என்றோ ஒரு நாள் பயணத்தில் பார்த்த ஒரு நிகழ்வு அதன் தொடர்ச்சி எப்படி இருக்கும் என்ற கற்பனையே இந்தக் கதை. அந்த நிகழ்வை மனதில் அசை போட்டு அதைக் கதையாய் எழுதும்போது கண் முன் வந்த காதைமாந்தர்களின் வாழ்க்கை நிகழ்வுகளின் பின்னலை வார்த்தைகள்மூலம் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன். ஒரு கதையில் இப்படி எல்லாம் நடக்குமா? இப்படி எல்லாம் எழுதலாமா? இது தான் சரி இது தவறு என்று படிப்பவர் மனதில் ஆயிரம் கேள்விகள் வரலாம் எனக்கும் வந்தது. விடை கதையில் வரும் கதாபாத்திரங்களின் வாழ்க்கை சூழல்கள் தான் தர்க்கம் செய்யும். அன்புடன் இலா.லிவின் coverphoto: Conor O''Nolan on Unsplash