இயல்பான சித்தரிப்புமொழியும் தாண்டித் தாண்டிச் செல்கிற வேகமான அளவான எள்ளலும் பொருத்தமான உரையாடல் மொழியும் குமாரநந்தனின் சிறுகதைகளின் வலிமையான அம்சங்கள். கிராமங்களும் நகரங்களும் கதைகளுக்குரிய பின்னணிகளாக மாறிமாறி அமைக்கப்பட்டிருந்தாலும் மனித மனத்தில் சூட்சுமத்தை உணரவும் உணர்த்தவுமான ஆர்வமும் வேகமும் எல்லாக் கதைகளிலும் காணப்படுகின்றன. ஒருபுறம் இச்சையின் வலிமை. இன்னொருபுறம் இழிவின் அவமானம். ஒரு விளிம்பில் கலைந்துபோன கனவுகளின் கோலம். இன்னொரு விளிம்பில் இயலாமைகளுக்கு இடையே ஊறிப் பெருகும் வற்றாத கருணை. எதிரெதிர் புள்ளிகளுக்கிடையே ஊசலாடும் மன இயக்கத்தைச் சித்தரித்துக் காட்டும் கலையில் குமாரநந்தனின் கலையாளுமை புலப்படுகிறது. மனத்தின் ஆழத்தை அறிய முயற்சி செய்யும் படைப்புகள் அனைத்தும் மகத்தானவையே. அவ்வரிசையில் ஒருவராகக் குமாரநந்தன் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.